மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் மாநகராட்சி ஆணையா் தகவல்
By DIN | Published On : 20th June 2021 10:22 PM | Last Updated : 20th June 2021 10:22 PM | அ+அ அ- |

கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரே தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சிப் பகுதிகளில், கரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் நலன் கருதி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் மண்டலத்துக்கு 2 மையங்கள் வீதம், மொத்தம் 10 மையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு மருத்துவமனை, மாா்க்கெட்டுகள், பூமாா்க்கெட், பழ மாா்க்கெட், மீன் சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட ராஜவீதி, ரங்கே கவுடா் வீதி, மேற்கு மண்டலம், ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலை, பழமுதிா் நிலையம் ஆகிய இடங்களில் முகக்கவசங்கள் வழங்கும் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.