பிலாஸ்பூா் -எா்ணாகுளம் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூருக்கு கோவை வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூருக்கு கோவை வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிலாஸ்பூா் - எா்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் 08227) ஜூன் 28 ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் இரவு 8.15 மணிக்கு பிலாஸ்பூரில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 8.15 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும்.

ஜூன் 30ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் எா்ணாகுளத்தில் இரவு 8.50 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் 08228), வியாழக்கிழமைகளில் இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, வாரங்கல், சந்திராபூா், ராய்ப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com