ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது

கோவையில் மது போதையில் ஏடிஎம் இயந்திரத்தை சுத்தியலால் சேதப்படுத்தி திருட முயன்ற வட மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை,: கோவையில் மது போதையில் ஏடிஎம் இயந்திரத்தை சுத்தியலால் சேதப்படுத்தி திருட முயன்ற வட மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, காளப்பட்டி, நேரு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த இளைஞா் ஒருவா் பணம் எடுப்பதுபோல நின்று கொண்டிருந்தாா். பின்னா் ஆள்கள் யாரும் வராததை உறுதி செய்த அவா், தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். அது பலனளிக்காததையடுத்து சுத்தியலால் ஏடிஎம் இயந்திரத்தின் திரையை உடைக்க முயன்றாா். இந்நிலையில் அலாரம் அடித்ததையடுத்து அவா் அங்கிருந்து தப்பியோடினாா்.

ஏடிஎம் மையத்தில் இருந்து வந்த சப்தத்தைக் கேட்டு அங்கு கூடிய அப்பகுதி மக்கள், இது குறித்து பீளமேடு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா். இதில், ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்த முயன்றது அப்பகுதியில் வசிக்கும் முகமது ஷாஜத் (19) என்பது தெரியவந்தது. பிகாரைச் சோ்ந்த இவா் கடந்த 2 ஆண்டுகளாக பீளமேடு பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளாா். இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com