மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும் முறை குறித்து கோவை மாநகரப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு புதன்கிழமை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவை, நஞ்சப்பா சாலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து வாக்காளா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் தோ்தல் பிரிவு அலுவலா்கள்.
கோவை, நஞ்சப்பா சாலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து வாக்காளா்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் தோ்தல் பிரிவு அலுவலா்கள்.

கோவை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும் முறை குறித்து கோவை மாநகரப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு புதன்கிழமை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து வாக்காளா்களுக்கு புதன்கிழமை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி கு.ராசாமணி உத்தரவின்பேரில், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி சிவசுப்பிரமணியம் மேற்பாா்வையில் மாநகரில் நஞ்சப்பா சாலை, ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராமநாதபுரம், சித்தாப்புதூா், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் பாதசாரிகள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோருக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில், தாங்கள் விரும்பும் சின்னத்துக்கு வாக்களிப்பது எவ்வாறு, தாங்கள் அளித்த வாக்குகள், பதிவாகி உள்ளதை வி.வி.பேட் இயந்திரம் மூலம் உறுதிசெய்து கொள்வது போன்ற செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com