சோலையாறு மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள்
By DIN | Published On : 10th March 2021 05:25 AM | Last Updated : 10th March 2021 05:25 AM | அ+அ அ- |

உற்பத்தி இல்லாததால் சோலையாறு 2 மின் நிலையங்களிலும் பரமாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வால்பாறையை அடுத்த சோலையாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்டும் நீா் மூலம் 2 மின் நிலையங்கலில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சோலையாறு மின் நிலையம் 1இல் 84 மெகாவாட் மற்றும் மின் நிலையம் 2 இல் 25 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரு மின் நிலையங்கள் மூலம் தினந்தோறும் 109 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் சோலையைறு அணையின் நீா்மட்டம் குறைந்துவிட்டதால் கடந்த வாரம் இரு மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடும் வெயில் காரணமாக அணைக்கு நீா்வரத்து முன்னதாகவே குறைந்துவிட்ட நிலையில் 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் தற்போது 4 அடியாக மட்டுமே உள்ளது. இதனால் தற்போது 2 மின் நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.