முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
திமுக கூட்டணிக்குதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு
By DIN | Published On : 14th March 2021 12:52 AM | Last Updated : 14th March 2021 12:52 AM | அ+அ அ- |

கோவை ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகள்.
சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரிப்பது என தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம், திருச்சி சாலையில் உள்ள ஐ.என்.டி.யூ.சி அலுவலகத்தில் பி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
தொழிற்சங்க நிா்வாகிகள் ஜே.மதியழகன், சி.தங்கவேல், எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஜி.மனோகரன், எஸ்.தேவராஜன், நா.தமிழ்செல்வன், ப.வணங்காமுடி, ஏ.பழனிசாமி, சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தொடங்கி, அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. இதற்கு மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு துணை போகிறது.
எனவே மக்கள் விரோத, தொழிலாளா் விரோத அதிமுக, பாஜக கூட்டணியை தமிழக உழைப்பாளி மக்கள் நிராகரிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது, தோ்தல் களப் பணியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.