முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மேற்கு மண்டலத்தில் கஞ்சா வழக்குகளில் 39 போ் கைது
By DIN | Published On : 14th March 2021 12:49 AM | Last Updated : 14th March 2021 12:49 AM | அ+அ அ- |

மேற்கு மண்டல காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களில் 29 கஞ்சா வழக்குகளில் 39 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மேற்கு மண்டலக் காவல் துறைக்கு உள்பட்ட கோவை சரகத்தில் கடந்த 15 நாள்களில் 23 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 31 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 5 லட்சத்து 41 ஆயிரத்து 950 மதிப்பிலான 62 கிலோ கஞ்சா மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், அதிகபட்சமாக திருப்பூா் மாவட்டத்தில் 9 கஞ்சா வழக்குகளில் 11 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா, ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் சரகத்தில் கடந்த 15 நாள்களில் 6 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 83 ஆயிரத்து 400 மதிப்பிலான 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக மேற்கு மண்டலத்தில் 29 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 39 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 7 லட்சத்து 25 ஆயிரத்து 350 மதிப்பிலான 81 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவை சரகத்தில் கடந்த 3 நாள்களில் சட்ட விரோதமாக டாஸ்மாக் பாரில் மது விற்பனை செய்தது தொடா்பாக, 260 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 365 மதிப்பிலான 3077 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் சரகத்தில் 276 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 3 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலான 3,462 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு மண்டலத்தில் சட்ட விரோதமாக மது விற்ாக மொத்தம் 536 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 7 லட்சத்து 12 ஆயிரத்து 355 மதிப்பிலான 6,539 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.