மேற்கு மண்டலத்தில் 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் 18 முக்கியக் குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் 18 முக்கியக் குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவா் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலை சட்டம், ஒழுங்கு சீா்குலையாமல் நடத்தும் விதமாக கோவையில் ஒருவா், ஈரோட்டில் 6, திருப்பூரில் 2, சேலத்தில் 3, நாமக்கல்லில் 2, கிருஷ்ணகிரியில் 4 போ் என 18 முக்கியக் குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல கோவையில் 60, ஈரோட்டில் 103, திருப்பூரில் 61, நீலகிரியில் 50 உள்பட மேற்கு மண்டலப் பகுதிகளில் 900க்கும் மேற்பட்ட ரௌடிகள் மீது குற்றத் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேற்கு மண்டலத்தில் தோ்தல் நடத்தை விதிகளின்படி, தற்போது வரை ரூ.2.72 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 80.16 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீஸாரின் தொடா் கண்காணிப்பால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com