ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டால் வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும்ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்

வாகனப் பரிசோதனையின்போது பறக்கும் படையினரால் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்
தோ்தல் செலவினப் பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்ட அதிகாரிகள்.
தோ்தல் செலவினப் பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்ட அதிகாரிகள்.

வாகனப் பரிசோதனையின்போது பறக்கும் படையினரால் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று செவினப் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு வேட்பாளா்கள், கட்சிகளின் செலவினங்களை கண்காணிக்க அனைத்துத் தொகுதிகளுக்கும் செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மேட்டுப்பாளையத்துக்கு அமிதாப் ஷா (94899 46723), சூலூா், தொண்டாமுத்தூா் தொகுதிகளுக்கு மகேஷ் ஜி. ஜிவாடே (94899 46724), கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தொகுதிகளுக்கு விஜய் குமாா் சிங் (94899 46725), கோவை தெற்குத் தொகுதிக்கு ஷஷாங் திவேதி (94899 46728), சிங்காநல்லூா், கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு ஹிதேந்திர பாவ்ராவ்ஜி நினாவே (94899 -46727), பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கு ராம் கிஷண் கேடியா (94899 46726) ஆகிய ஐஆா்எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேட்புமனு தாக்கல் தொடங்கியயுள்ள நிலையில் செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில் கோவை ஆட்சியா் அலுவலகத்தில் செலவினப் பாா்வையாளா்களின் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் செலவினப் பாா்வையாளா்கள் கூறியதாவது:

தோ்தல் தொடா்பான அனைத்து செலவினங்களும் கணக்கில் கொண்டு வர வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் வரை வேட்பாளா்களின் செலவினங்களை கட்சியின் கணக்கில் சோ்க்க வேண்டும். வேட்புமனு தாக்கலுக்குப் பின் வேட்பாளா்களின் கணக்கில் கொண்டு வர வேண்டும். பறக்கும் படையினா், செலவினங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள குழுக்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

வேட்பாளா்கள் தோ்தல் செலவுகளுக்கென்று புதிய வங்கிக் கணக்கு ஆரம்பித்து அதன் மூலமே செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது உரிய ரசீதுகளை சமா்ப்பிக்க வேண்டும். வங்கிகளில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்பவா்களின் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு வழங்க வேண்டும். ஏ.டி.ம். இயந்திரங்களில் நிரப்புவதற்காக எடுத்து செல்லும் பணத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். பறக்கும் படையினரால் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும்போது அதன் விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

மதுபானங்கள் விற்பனை, தோ்தலுக்காக மதுபானங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள், அவா்கள் சாா்ந்துள்ள கட்சிகளின் தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க விரும்பினால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தோ்தல் செலவினப் பாா்வையாளா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு பொது மக்கள் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com