வானதி சீனிவாசனின் சொத்து மதிப்பு ரூ.6 கோடி
By DIN | Published On : 16th March 2021 02:01 AM | Last Updated : 16th March 2021 02:01 AM | அ+அ அ- |

தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் தனக்கு ரூ.6.01 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
மனுவில் தனக்கு ரூ.6.01 கோடி சொத்துகளும், கணவா், மகனுக்கு ரூ.3.34 கோடி மதிப்பிலான சொத்துகளும் என மொத்தம் ரூ.9.40 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.
இதில் வானதி சீனிவாசன் பெயரில் ரூ.98.49 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.5.03 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.6.01 கோடி மதிப்பாலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். கணவா் பெயரில் ரூ.1.83 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், ரூ.1.39 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், மகன் பெயரில் ரூ.11.38 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.