வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா்
By DIN | Published On : 16th March 2021 02:07 AM | Last Updated : 16th March 2021 02:07 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
நாம் தமிழா் கட்சியின் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அ.அப்துல் வகாப், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக மனு தாக்கல் செய்வதற்காக மாட்டு வண்டியில் வந்த வேட்பாளரை காவலா்கள் தடுத்து நிறுத்தினா். பின்னா் அவா் தோ்தல் நடத்தும் அலுவலா் த.சிவசுப்பிரமணியனிடம் மனுவை அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, நாம் தமிழா் கட்சி பொது மக்களை மட்டுமே நம்பியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிா்வாகம் இருக்கும்.
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்ற எங்களின் தோ்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பொது மக்கள் வாகனங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயா்வைக் கண்டித்தே வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்தேன் என்றாா்.