தமாகா துணை தலைவர் பதவி ராஜிநாமா: ஜி.கே.வாசன் துரோகம் இழைத்து விட்டதாக கோவை தங்கம் குற்றச்சாட்டு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் புதன்கிழமையன்று தனது பதவியினை ராஜிநாமா செய்தார்  
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் புதன்கிழமையன்று தனது பதவியினை ராஜிநாமா செய்தார்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் புதன்கிழமையன்று தனது பதவியினை ராஜிநாமா செய்தார்

கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் புதன்கிழமையன்று தனது பதவியினை ராஜிநாமா செய்தார்  

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது 30 வயதில் வால்பாறை தொகுதியில் போட்டியிட இந்திராகாந்தி வாய்ப்பு அளித்தார். மேலும், 1998-ஆம் ஆண்டு தேர்தலில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மூப்பனார் வாய்ப்பு அளித்தார். வால்பாறை மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பெற்று தந்துள்ளேன்.  இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சுயேட்சை சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் நிற்குமாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். மேலும், திருவிக நகர் அல்லது தாராபுரத்தில் போட்டியிடுமாறு அமைச்சர்கள் என்னை வலியுறுத்தினர்.

ஆனால், வால்பாறை தொகுதிக்கு பதிலாக வேறு எந்த தொகுதியில் நிற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்ததுடன் 6 தொகுதியை வாங்க வேண்டாம் சுயேட்சையாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடலாம் என சொன்னதை ஜி.கே.வாசன் ஏற்கவில்லை. வால்பாறைத் தொகுதி எனக்கு ஒதுக்கப்படாததற்கு ஒரே காரணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான். ஜி.கே.வாசன் எனக்கு துரோகம் இழைத்துவிட்டார், எனக்கு எதிராக கட்சியில் சதி, துரோகம் நடந்துள்ளது.

காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக தான் நான் இத்தனை காலம் தமாகாவில் இருந்தேன். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரைக் கூட நான் தான் வாங்கித் தந்தேன். காங்கிரஸில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன்.

இதன் காரணமாக தமாகா துணைத்தலைவர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன். என்னுடன் இணைந்து தமாகா நிர்வாகிகள் பலரும் ராஜினாமா செய்கின்றனர். தனிக்கட்சி ஆரம்பிக்கும் தகுதி எனக்கில்லை. மேலும் திமுகவில் சேரும் எண்ணமும் தற்போது இல்லை. சுயேட்சையாக போட்டியிட இதுவரை விரும்பவில்லை. இருப்பினும் நாளை எனது நிலைப்பாடு மாறலாம் என்றார்.

பேட்டியின்போது தமாகா இளைஞரி மாநில துணை தலைவர் அருண் பிரகாஷ், மாநில செயலாளர்கள் பொன் ஆனந்தகுமார், சிஏ.ராஜ்குமார், ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com