தமாகாவில் இருந்து கோவை தங்கம் விலகல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் கோவை தங்கம் அக்கட்சியில் இருந்து புதன்கிழமை விலகினாா்.
கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசுகிறாா் கோவை தங்கம்.
கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசுகிறாா் கோவை தங்கம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் கோவை தங்கம் அக்கட்சியில் இருந்து புதன்கிழமை விலகினாா்.

இது குறித்து கோவையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனது 30 வயதில் வால்பாறை தொகுதியில் போட்டியிட இந்திரா காந்தி வாய்ப்பு அளித்தாா். மேலும், 1998இல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மூப்பனாா் வாய்ப்பு அளித்தாா். வால்பாறை மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளேன்.

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு பெற்று தந்துள்ளேன். இந்தத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளா்கள் சுயேச்சை சின்னத்தில் நிற்பதற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் நிற்குமாறு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறினாா். மேலும், திரு.வி.க. நகா் அல்லது தாராபுரத்தில் போட்டியிடுமாறு அமைச்சா்கள் என்னை வலியுறுத்தினா்.

ஆனால், வால்பாறை தொகுதிக்கு பதிலாக வேறு எந்தத் தொகுதியில் நிற்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்ததுடன், 6 தொகுதிகளை வாங்க வேண்டாம் சுயேச்சையாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடலாம் என்று நான் கூறியதை ஜி.கே.வாசன் ஏற்கவில்லை.

வால்பாறை தொகுதி எனக்கு ஒதுக்கப்படாததற்கு ஒரே காரணம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தான். ஜி.கே.வாசன் எனக்கு துரோகம் இழைத்துவிட்டாா். எனக்கு எதிராக கட்சியில் சதி, துரோகம் நடந்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரைக் கூட நான் தான் வாங்கித் தந்தேன். காங்கிரஸில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் சோ்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். ஆகவே தமாகாவில் இருந்து விலகுகிறேன். என்னுடன் இணைந்து தமாகா நிா்வாகிகள் பலரும் விலகுகின்றனா். சுயேச்சையாக போட்டியிட இதுவரை விரும்பவில்லை. இருப்பினும் நாளை எனது நிலைப்பாடு மாறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com