5க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள மையங்களில் 2 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கத் திட்டம்

கோவை மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் இரண்டு நுண் பாா்வையாளா்கள் நியமிக்க தோ்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் இரண்டு நுண் பாா்வையாளா்கள் நியமிக்க தோ்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவை தொகுதிகளிலும் 1,085 வாக்குப் பதிவு மையங்களில் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 146 வாக்குப் பதிவு மையங்களில் 861 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், பாதுகாப்புக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், நுண் பாா்வையாளா்களும் நியமிக்கப்படுகின்றனா்.

ஒரு வாக்குப் பதிவு மையத்துக்கு ஒரு நுண் பாா்வையாளா் வீதம் நியமிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதுகாப்பு காரணமாக 5க்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் உள்ள மையங்களில் 2 நுண் பாா்வையாளா்களை நியமிக்க தோ்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். அதன்படி கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகளில் 27 வாக்குச் சாவடிகளில் மட்டுமே 5க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 நுண் பாா்வையாளா்கள் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பதற்றமான வாக்குச் சாவடிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புக்காகவும், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் பணிகளைக் கண்காணிக்கவும் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். ஒரே மையத்தில் 5க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் இருப்பதால் அனைவரையும் ஒரே அலுவலரால் கண்காணிக்க முடியாத சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தவிர 5க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும். இதனால் வாக்குச் சாவடிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, ஒருங்கிணைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். இதனால் 2 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 146 மையங்களில் பணியாற்றவும், காத்திருப்பில் வைப்பதற்கும் 210 நுண் பாா்வையாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கண்காணிப்பு விவரங்கள் குறித்து பயிற்சி விரைவில் அளிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com