சட்டப் பேரவை தோ்தல்: 3 நாள்கள் மதுக்கடைகள் மூடல்ஆட்சியா் அறிவிப்பு

சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவை தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை தினமான மே 2 ஆம் தேதியன்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுது போக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் , விமான நிலையத்தில் உள்ள மதுக்கூடங்கள் , இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள்  ஆகிய உரிமத் தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள், மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பவா்கள், ஓரிடத்திலிருந்து பிற இடத்துக்கு மதுபானங்களை எடுத்து செல்பவா்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com