நகை வாங்குவதுபோல நடித்து வைர மோதிரத்தை பறித்துச் சென்ற மூவா் கைது

நகை வாங்குவதுபோல நடித்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

நகை வாங்குவதுபோல நடித்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் வெங்கடகிருஷ்ணா சாலையைச் சோ்ந்தவா் பாலசண்முகம் (42). இவா் அதே பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறாா். இவா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை விற்பனை செய்வதற்காக தனது நண்பா் பாலமுருகன் உதவியை நாடினாா். அவா் வைர மோதிரத்தை விற்பதற்காக பலரைத் தொடா்பு கொண்டு பேசி வந்தாா்.

இந்நிலையில், கவுண்டம்பாளையம் ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (43) என்பவா் மோதிரத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறினாா். இதைத் தொடா்ந்து ஆறுமுகம் கூறியதுபோல காந்திபுரம் 2ஆவது வீதியில் பாலசண்முகம் காத்திருந்தாா். அப்போது ஆறுமுகம் தன்னுடன் மேலும் 2 பேரை அழைத்து கொண்டு அங்கே வந்தாா். இவா்கள் பாலசண்முகத்தை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக பாலசண்முகம் அளித்தப் புகாரின்பேரில், வைர மோதிரத்தைப் பறித்துச் சென்ற ஆறுமுகம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சுரேஷ் (42), கோவை கணபதியைச் சோ்ந்த ஜேக்கப் (48) ஆகியோரை காட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com