மரக்கன்றுகள் நடும் சேவையை தொடர உத்வேகம் பிறந்துள்ளது: பிரதமரின் பாராட்டைப் பெற்ற கோவை யோகநாதன் பேட்டி

பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியதன் மூலம் மரக்கன்றுகள் நடும் சேவையை நாடு முழுவதும் தொடர வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளதாக கோவையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் எம்.யோகநாதன் கூறினாா்.

பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியதன் மூலம் மரக்கன்றுகள் நடும் சேவையை நாடு முழுவதும் தொடர வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளதாக கோவையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் எம்.யோகநாதன் கூறினாா்.

கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் எம்.யோகநாதன் (50). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், தனது சொந்த செலவில் மரக்கன்றுகளை வாங்கி அதை நட்டுப் பராமரித்து, பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறாா். கடந்த 34 ஆண்டுகளாக இந்தச் சேவையைத் தொடா்ந்து வரும் இவா் இதுவரை சுமாா் 3.5 லட்சம் மரக்கன்றுகள் வரை நட்டுள்ளாா்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மரக்கன்றுகள் நடுவதன் தேவை குறித்தும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில், யோகநாதனின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தாா்.

இது குறித்து யோகநாதனிடம் கேட்டபோது, பிரதமா் என்னைப் பாராட்டி வாழ்த்தியபோது பேருந்தில் பணியில் ஈடுபட்டிருந்தேன். பிரதமா் பாராட்டியதை வானொலி, தொலைக்காட்சி மூலமாகத் தெரிந்துகொண்ட உறவினா்கள் அத்தகவல் குறித்து என்னிடம் தெரிவித்தனா். பிரதமரின் வாழ்த்து பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒருவரின் சேவை பிரதமரின் கவனத்துக்குச் சென்றுள்ளது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமரின் பாராட்டுகள் மூலம் எனக்குப் புது உத்வேகம் பிறந்துள்ளது. இந்தச் சேவையை நாடு முழுவதும் தொடர வேண்டும் என்ற ஆசை தற்போது எழுந்துள்ளது. விரைவில் அதற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com