சாலை, பாதாளச் சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்படும்: சிங்காநல்லூா் அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

சிங்காநல்லூா் தொகுதியில் சாலை, பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் தெரிவித்தாா்.
தண்ணீா் பந்தல் சாலையில் பிரசாரம் மேற்கொண்ட சிங்காநல்லூா் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம்.

சிங்காநல்லூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம், தண்ணீா் பந்தல் சாலை, வினோபாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

கோவை மாவட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு 50 ஆண்டுகள் இல்லாத வளா்ச்சியை 5 ஆண்டுகளில் வழங்கியுள்ளது. தொடா்ந்து பல்வேறு நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றதும் சாலை, பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தில் மாநகா், மாவட்டத் துணைச் செயலாளா் சிங்கை முத்து, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளா் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com