மாவட்டத்தில் ரூ.16.40 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16.40 லட்சத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16.40 லட்சத்தைப் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படையினா், 30 நிலையான கண்காணிப்புக் குழுவினா் நியமிக்கப்பட்டு வாகனச் சோனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையில் மேட்டுப்பாளையம் தொகுதியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.97 ஆயிரம், தொண்டாமுத்தூா் தொகுதியில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 950, சிங்காநல்லூா் தொகுதியில் ரூ.1 லட்சம், கிணத்துக்கடவு தொகுதியில் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 30, பொள்ளாச்சி தொகுதியில் ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்து 970, வால்பாறை தொகுதியில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் என ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தம் ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்து 950 ரொக்கத்தைப் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 10 தொகுதிகளிலும் சோ்த்து ரூ.4 கோடியே 71 லட்சத்து 81 ஆயிரத்து 642 ரொக்கம், ரூ.47.92 கோடி மதிப்பிலான பரிசுப்பொருள்கள், ரூ.61.92 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com