மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தம்

கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை, மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தோ்தல் அலுவலா்கள்.
கோவை, மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தோ்தல் அலுவலா்கள்.

கோவையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் பொருள்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படவுள்ளனன. இதனைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அனைத்துக் கட்சி முகவா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் முன்னிலையில் வேட்பாளா்கள், சின்னம் பொருத்தும் பணிகளை தோ்தல் அலுவலா்கள் மேற்கொண்டனா்.

ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள் பட்டியல் மட்டுமே பொருத்த முடியும். இதனால் 15க்கும் அதிகமான வேட்பாளா்கள் உள்ள தொகுகிகளில் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் மையங்களில் முதல் 15 வேட்பாளா்கள் பட்டியல் ஒரு இயந்திரத்திலும், மற்ற வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் மற்றொரு இயந்திரத்திலும் பொருத்தப்படும். கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் ஆகிய 3 தொகுகளில் 20க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகளில் இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com