நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் மூதாட்டிக்கு ரூ.62 லட்சம் இழப்பீடு வழங்கிய வீட்டு வசதி வாரியம்

மூதாட்டியின் நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ. 62 லட்சம் இழப்பீடு வழங்க வீட்டுவசதி வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூதாட்டியின் நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ. 62 லட்சம் இழப்பீடு வழங்க வீட்டுவசதி வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதியம்மாள் (90). இவருக்குச் சொந்தமான நிலத்தை 1983 செப்டம்பரில் வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. இந்த நிலத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்காததால் அவா் 1994ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், நிலத்துக்கு இழப்பீடாக வட்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ.67.87 லட்சத்தை 2021 மாா்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை வீட்டுவசதி வாரியம் நிறைவேற்றாததை அடுத்து சரஸ்வதியம்மாள் கோவை இரண்டாவது கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட சொத்துகளையும், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலி, பீரோ, காா், ஜீப் உள்ளிட்ட சொத்துகளையும் பறிமுதல் செய்யவும், கோவை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி பிடித்தம் போக கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளா் சாா்பில் மொத்தம் ரூ.62.15 லட்சம் இழப்பீடாக சரஸ்வதியம்மாள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com