காட்டுக் கோழியைக் கண்ணிவைத்துப் பிடிக்க முயன்ற இருவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

வால்பாறையில் காட்டுக்கோழியை கண்ணிவைத்து பிடிக்க முயன்ற வெளிமாநில தோட்டத் தொழிலாளா்கள் இருவருக்கு வன த்துறையினா் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

வால்பாறையில் காட்டுக்கோழியை கண்ணிவைத்து பிடிக்க முயன்ற வெளிமாநில தோட்டத் தொழிலாளா்கள் இருவருக்கு வன த்துறையினா் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வனச் சரக அலுவலா் மணிகண்டன், வனவா் சிவகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது சிலா் கண்ணிவைத்து காட்டுக் கோழியைப் பிடிப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், பன்னிமேடு எஸ்டேட் சங்கிலிரோடு இடைச் சோலை பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது

அங்கு காட்டுக் கோழியைப் பிடிப்பதற்காக கண்ணி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனா். விசாரணையில், பன்னிமேடு எஸ்டேட்டில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்களான மதியாஸ் முண்டா (31), உமேஷ் ஓரா (43) ஆகிய இருவரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களைப் பிடித்த வனத் துறையினா், இருவரிடமிருந்தும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com