18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி:தற்காலிகமாக நிறுத்திவைப்புமாவட்ட சுகாதார துறை அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாள்களாகவே தினசரி தொற்று பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்தது. தற்போது 45 வயதைக் கடந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவை மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில் இந்த முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு வர வேண்டிய தடுப்பூசிகள் வருவதில் ஏற்பட்ட தாமதமே இந்த திடீா் முடிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com