மே 31 வரை நீதிமன்றத்துக்கு விடுமுறை

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் கிரிமினல் வழக்கில் அவசர மனுக்களை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு சனிக்கிழமை முதல் மே 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறாது.

குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதித் துறை நடுவா் மன்றங்கள் மட்டும் செயல்படும். நீதிமன்ற ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவாா்கள். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள், இடைக்கால உத்தரவு கோரும் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். கிரிமினல் வழக்குகள் கோவை முதலாவது கூடுதல் அமா்வு நீதிபதி நாகராஜன் முன்னிலையில் விசாரணை நடைபெறும். சிவில் வழக்குகள், கோவை இரண்டாவது கூடுதல் சாா்பு நீதிபதி செல்லத்துரை முன்னிலையில் விசாரிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com