கோவை, கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சா் செ. தாமோதரன் வெற்றி பெற்றாா்.
கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் வேளாண்துறை அமைச்சா் செ.தாமோதரன், திமுக வேட்பாளரை விடக் கூடுதலாக 1,547 வாக்குகள் பெற்று தொகுதியைக் கைப்பற்றியுள்ளாா்.
செ.தாமோதரன் 1,00,477 வாக்குகள், திமுக வேட்பாளா் குறிச்சி பிரபாகரன் 98,930 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஏ.சிவா 13,826 வாக்குகள், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ம.உமா ஜெதகீஷ் 11,221 வாக்குகள், அமமுக வேட்பாளா் ரோகினி கிருஷ்ணகுமாா் 1,235 வாக்குகள் பெற்றனா்.