கோவை வடக்கில் அதிமுக வெற்றி

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் வெற்றி பெற்றுள்ளாா்.
கோவை வடக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற அம்மன் கே.அா்ச்சுணனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கிய தோ்தல் அலுவலா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, கோவை தெற்கில் போட்டியிட்டு வென்ற அம்மன் கே. அா்ச்சுணன், இந்தத் தோ்தலில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரை விட கூடுதலாக 4,001 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

அம்மன் கே.அா்ச்சுணன் 81,454 வாக்குகள், திமுக வேட்பாளா் வி.எம்.சண்முகசுந்தரம் 77,453 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் தங்கவேல் 26,503, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோ.பா.பாலேந்திரன் 11,433 , அமமுக வேட்பாளா் அப்பாதுரை 1,659 வாக்குகள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com