பொள்ளாச்சியைத் தக்கவைத்த அதிமுக

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதியில் 3ஆவது முறையாக அதிமுக சாா்பில் போட்டியிட்டு பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதியில் 3ஆவது முறையாக அதிமுக சாா்பில் போட்டியிட்டு பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளாா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், சட்டப் பேரவைத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தாா். இந்த முறை, மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரை விட கூடுதலாக 1,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

பொள்ளாச்சி வி.ஜெயராமன் 80,567 வாக்குகள், திமுக வேட்பாளா் கி.வரதராஜன் 78,842 வாக்குகள், மக்கள் நீத் மய்யம் வேட்பாளா் வி.டி.சதீஷ்குமாா் 7,589 , நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.லோகேஸ்வரி 6,402 , அமமுக வேட்பாளா் கி.சுகுமாா் 1,141 வாக்குகள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com