வால்பாறையில் மீண்டும் அதிமுக வெற்றி

கோவை மாவட்டம், வால்பாறை தொகுதியில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துள்ளது.

கோவை: கோவை மாவட்டம், வால்பாறை தொகுதியில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துள்ளது.

வால்பாறை தொகுதியில் கடந்த 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கஸ்தூரி வாசு வெற்றி பெற்றாா். இந்நிலையில், இந்தத் தோ்தலில் அதிமுக சாா்பில் டி.கே.அமுல் கந்தசாமி அதிமுக சாா்பில் போட்டியிட்டு 12,223 வாக்கு வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் எம்.ஆறுமுகத்தை தோற்கடித்தாா்.

டி.கே.அமுல் கந்தசாமி - 71,672 வாக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் எம்.ஆறுமுகம் 59,449 , நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜெ.கோகிலா 7,632, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் டி.செந்தில்ராஜ் 3,314, தேமுதிக வேட்பாளா் எம்.எஸ்.செல்வராஜ் 1,335 வாக்குகள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com