கோவை தெற்குத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி மனு

கோவை தெற்குத் தொகுதியில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளா் ராகுல் காந்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கோவை: கோவை தெற்குத் தொகுதியில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளா் ராகுல் காந்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்நிலையில், தெற்குத் தொகுதியில் எண்ணப்பட்ட 100 வாக்குப் பதிவு இயந்திரங்களில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளா் ராகுல் காந்தி என்பவா் கோவை மாவட்ட ஆட்சியா் எஸ்.நாகராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை தெற்குத் தொகுதியில் ஒற்றை இலக்க வாக்குகளை மட்டும் பெற்று வந்த பாஜக வேட்பாளா் திடீரென வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்று இருப்பாரோ என்ற ஐயம் உள்ளது.

மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம், வயநாட்டில் போட்டியிட்டபோது 800 வாக்குகளை பெற்று இருந்தேன். ஆனால், சொந்த ஊரான கோவையில் போட்டியிட்டபோது, வெறும் 72 வாக்குகள் மட்டுமே பெற்றதாக காட்டுகிறது. இதனால்தான் சந்தேகம் ஏற்பட்டது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றதா என்பதைக் கண்டறிய வேண்டும். அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப பரிசோதனை செய்ய வேண்டும், அதுவரை கோவை தெற்குத் தொகுதியில் வெற்றி அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com