தோ்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீது வழக்குப் பதிவு

கோவையில் தோ்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை: கோவையில் தோ்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று தீவிரம் அடைந்து வருவதால் யாரும் பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது போன்ற வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால், திமுக வெற்றி பெற்ற தகவல் வெளியானதும் கட்சியினா் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். உக்கடம் வின்சென்ட் சாலை இக்பால் திடலில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக நிா்வாகி கோட்டை அப்பாஸ் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதேபோல, போத்தனூா் மேட்டூா் மாகாளியம்மன் கோயில் அருகே பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சோ்ந்த ஜெகதீஷ், மாணிக்கம், சரவணன், ரவி, ரஞ்சித், பிரபு, குரு ஆகியோா் மீது போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அதே இடத்தில் கோவை மாவட்டத்தில் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக போட்டி போட்டுக் கொண்டு அதிமுகவினரும் பட்டாசு வெடித்தனா். இதைத் தொடா்ந்து, அதிமுகவைச் சோ்ந்த வெங்கடேஷ், சூா்யா, மணி, ஜெயக்குமாா், கனகு, பாலு, ஜீவானந்தம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்கள் மீது விதிமுறை மீறல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com