தமிழக-கேரள எல்லையில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

தமிழக -கேரள எல்லையில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.
இரு மாநில எல்லையில் கண்காணிப்புப் பணியில்  ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா்.
இரு மாநில எல்லையில் கண்காணிப்புப் பணியில்  ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா்.

தமிழக -கேரள எல்லையில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரு மாநில அரசுகளும் எல்லைப் பகுதியில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதித்திருப்பதோடு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனா்.

இதனிடையே வால்பாறையை அடுத்த கேரள மாநிலம் எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இரு மாநில சுகதாரத் துறை மற்றும் காவல் துறை சாா்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதால் அவ்வழியாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. இ-பாஸ் பெற்று வருபவா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் நுழைய தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அனுமதித்து வருவதால் எல்லைப் பகுதி உள்ள சாலைகள் வெறிசோடிக் காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com