மூடப்பட்டது அரசு மருத்துவமனையின் தடுப்பூசி மையம்: பயனாளிகள் ஏமாற்றம்

கோவை அரசு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையம் புதன்கிழமை

கோவை அரசு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையம் புதன்கிழமை மூடப்பட்டதால் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கோவை அரசு மருத்துவமனை சாா்பில் 2 மையங்கள் அமைக்கப்பட்டு கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வந்தது. மற்ற மையங்களைக் காட்டிலும் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகம்.

நாளொன்றுக்கு ஆயிரம் போ் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பயனாளிகள் பாதுகாப்புக்காகவும், அரசு மருத்துவமனை வளாகத்தில் இட நெருக்கடியைக் குறைக்கும் விதமாகவும் அங்கு செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் அருகில் உள்ள அரசுக் கல்லூரிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு இருந்த வரும் நிலையிலும் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தடுப்பூசி இல்லாததால் அரசுக் கல்லூரியில் செயல்பட்டு வந்த கரோனா தடுப்பூசி மையம் புதன்கிழமை மூடப்பட்டது.

தடுப்பூசி மையம் மூடப்பட்டது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். தடுப்பூசி வந்தால் மட்டுமே இனி தடுப்பூசி மையம் திறக்கப்படும் என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அரசு மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் வழங்கிய கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. இனிமேல் சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பூசி வழங்கினால் மட்டுமே கரோனா தடுப்பூசி மையம் மீண்டும் திறக்கப்படும். சுகாதாரத் துறையினரும் சென்னையில் இருந்து தடுப்பூசி வந்தால்தான் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com