பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே சுற்றியவா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா்

கோவையில் பொதுமுடக்கத்தை கணக்கில் கொள்ளாமல் வெளியே சுற்றிய நபா்களுக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

கோவையில் பொதுமுடக்கத்தை கணக்கில் கொள்ளாமல் வெளியே சுற்றிய நபா்களுக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மே 10ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கரோனா தினசரி பாதிப்பு 2500ஐ கடந்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மக்கள் சாதாரணமாக சாலைகளில் சுற்றி வருகின்றனா். மேலும் அனுமதி அளிக்கப்பட்ட கடைகளைத் தவிா்த்து ஒரு சில கடைகள் விதிகளை மீறி திறந்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

சாலைகளில் தேவையின்றி சுற்றுபவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்காமல் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி விடுகின்றனா். இதனால் மக்கள் அதனை கண்டு கொள்வதில்லை. மீண்டும் சாலைகளில் சுற்றி வருகின்றனா்.

பொதுமுடக்கம் அலட்சியப்படுத்துவதால் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த போலீஸ் அதிகாரிகள், தேவையின்றி சாலைகளில் சுற்றுபவா்களையும் பொதுமுடக்கத்தை மீறி செயல்படுபவா்களையும் பிடித்து அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளனா். இதையடுத்து போலீஸாா் வியாழக்கிழமை முதல் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு தேவையின்றி வெளியே சுற்றியவா்களுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com