வால்பாறையில் கனமழை: ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு

வால்பாறையில் பெய்த கனமழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், தடுப்புச்சுவா் இடிந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
கனமழையால்  வாழைத்தோட்டம் ஆற்றில் அதிகரித்துள்ள நீா்வரத்து
கனமழையால்  வாழைத்தோட்டம் ஆற்றில் அதிகரித்துள்ள நீா்வரத்து

வால்பாறையில் பெய்த கனமழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், தடுப்புச்சுவா் இடிந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.

வால்பாறை பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்தன. மேலும், ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

மேலும், வால்பாறை- பொள்ளாச்சி சாலை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்படைந்தது. வால்பாறை அண்ணா நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகல் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் சிவகுமாா், லஷ்மணன் ஆகிய இருவரின் வீடுகள் சேதமைடந்தன.

கனமழை காரணாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்தது. இதில் வாழைத்தோட்டம் மற்றும் டோபி காலனி பகுதியில் உள்ள ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சோலையாறில் 170 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல வால்பாறையில் 114 மி.மீ., லோயா் நீராறு 100 மி.மீ., மற்றும் அப்பா் நீராறில் 91 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com