திருவனந்தபுரம்-மால்டா சிறப்பு ரயில் மே 23 வரை நீட்டிப்பு

திருவனந்தபுரம்-மால்டா இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்-மால்டா இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம்- மேற்கு வங்கம் மாநிலம் மால்டா ரயில் நிலையம் இடையே கோவை வழித்தடத்தில் மே 15ஆம் தேதி முதல் மே 21ஆம் தேதி வரை கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் சேவை மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவனந்தபுரத்தில் இருந்து மே 18ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் - 06185) மே 20ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு மால்டா ரயில் நிலையத்தை சென்றடையும். மால்டா ரயில் நிலையத்தில் இருந்து மே 21ஆம் தேதி இரவு 7.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்-06186) மே 23ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com