திருப்பூரில் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 2.70 கோடி

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம், திருப்பூா், கோவை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்ய வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூா் தொழில்துறையினா் சாா்பில் முதல்வா் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.2.70 கோடி முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினா்.

கரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.2.70 கோடி நிதி வழங்கியவா்கள் விவரம்:

ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் ரூ.1 கோடி, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ரூ.50 லட்சம், கோவை அஸ்வின் மருத்துவமனை தலைவா் மருத்துவா் எல்.பி.தங்கவேலு ரூ.10 லட்சம், திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் எஸ்.முருகசாமி ரூ.10 லட்சம், திருப்பூா் மேற்கு ரோட்டரி சங்கம் வி.ரகுபதி ரூ.10 லட்சம், கே.ஆா்.சி.ஹவுஸிங் மற்றும் இன்பராஸ்ட்ரக்சா் நிறுவனம் சிகாமணி ரூ.10 லட்சம், மங்கலம் மேற்கு ரோட்டரி சங்கம் மூா்த்தி ரூ.10 லட்சம், வெள்ளக்கோவில் ஜெகத்குரு டெக்ஸ்டைல்ஸ் முருகேசன் ரூ.10 லட்சம், ஜே.வி.டேப்ஸ் வி.பழனிசாமி ரூ.15லட்சம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் ரூ.15 லட்சம், நிட்மா தலைவா் அகில் ரத்தினசாமி ரூ.5 லட்சம், நிட்மா செயலாளா் ஆா்.ராஜாமணி ரூ.5 லட்சம், பாப்பீஸ் எக்ஸ்போா்ட்ஸ் ஏ.சக்திவேல் ரூ.10 லட்சம், விக்னேஷ் ஏஜென்சீஸ் ஆறுமுகம் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 2.70 கோடி நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com