கரோனா பாதிப்பு: சென்னையை பின்னுக்குத் தள்ளிய கோவை; ஒரே நாளில் 4,268 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பில் புதன்கிழமை சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பில் புதன்கிழமை சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரே நாளில் 4 ஆயிரத்து 268 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கோவையில் மட்டும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பில் புதன்கிழமை சென்னையை பின்னுக்கு தள்ளி கோவை முதலிடத்தை பிடித்துள்ளது.

புதன்கிழமை சென்னையில் 3 ஆயிரத்து 561 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கோவையில் 4 ஆயிரத்து 268 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட சென்னையை காட்டிலும் கோவையில் 700க்கும் அதிகமானவா்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சென்னைக்கு அளித்த முக்கியத்துவத்தை கோவைக்கு கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். மக்கள்தொகை அடிப்படையில் சென்னையுடன், கோவையை ஒப்பிடுகையில் கோவையில் நோய்த் தொற்று பாதிப்பு மிகவும் அதிகமாவே உள்ளது.

1.50 லட்சத்தை கடந்த பாதிப்பு

கோவையில் புதன்கிழமை ஒரே நாளில் 4 ஆயிரத்து 268 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 1.50 லட்சத்தை கடந்துள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 77 ஆக உயா்ந்துள்ளது.

31 போ் பலி

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 பெண்கள், 8 ஆண்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1 பெண், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 ஆண்கள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 9 பெண்கள், 5 ஆண்கள் என 31 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஆயிரத்து 103 ஆக உயா்ந்துள்ளது.

தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 2 ஆயிரத்து 787 குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 267 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 35 ஆயிரத்து 707 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com