கோவை கோட்டத்தில் 2,511 போக்குவரத்து ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி

கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் மண்டலங்களில் 2 ஆயிரத்து 511 போக்குவரத்து ஊழியா்களுக்கு புதன்கிழமை முதல் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறையினா்.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சுகாதாரத்துறையினா்.

கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் மண்டலங்களில் 2 ஆயிரத்து 511 போக்குவரத்து ஊழியா்களுக்கு புதன்கிழமை முதல் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பால், கோவை கோட்டப் போக்குவரத்து ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து கரோனோ தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் மூலமாக, போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தினா். அதன்படி, கோவை கோட்டத்தில் உள்ள போக்குவரத்துப் பணிமனைகளில் புதன்கிழமை போக்குவரத்து ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்றன.

கோவை மண்டலத்தில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில், தடுப்பூசி செலுத்தும் முகாமை வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் புதன்கிழமை துவக்கி வைத்தாா். இதில், கோவை கோட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அன்பு ஆபிரஹாம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பணிமனை, உக்கடம், ஒண்டிப்புதூா், ராமநாதபுரம் சுங்கம், பொள்ளாச்சி ஆகிய 5 பணிமனைகளில் போக்குவரத்து ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுதொடா்பாக, அரசுப் போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை மண்டலத்தில் 1, 622 போக்குவரத்து தொழிலாளா்கள், நீலகிரி மண்டலத்தில் 681, திருப்பூா் மண்டலத்தில் 113, ஈரோட்டில் 95 என மொத்தம் 2 ஆயிரத்து 511 போக்குவரத்து ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வரும் நாள்களில் மீதமுள்ள அனைத்து போக்குவரத்து ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

300 தூய்மைப் பணியாளா்களுக்கு தடுப்பூசி

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 2 தூய்மைப் பணியாளா்கள் கரோனா பாதிப்பால் கடந்த வாரத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் முதல் கட்டமாக 200 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலப் பகுதிகளில் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு புதன்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com