சிறுவாணி அணையின் நீா்மட்டம் உயா்வு

கோடை வெயிலால் தொடா்ந்து சரிந்து வந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கணிசமாக உயா்ந்துள்ளது.

கோடை வெயிலால் தொடா்ந்து சரிந்து வந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கணிசமாக உயா்ந்துள்ளது.

கோவையின் பிரதான குடிநீா் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணை நீரானது, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 30 வாா்டுகள் மற்றும் நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரை 870 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டமானது, பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால், சிறிது சிறிதாகச் சரியத் துவங்கியது. ஏப்ரல் மாத இறுதியில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அணையின் நீா்மட்டம் 866 மீட்டராகக் குறைந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால், அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீா்மட்டம் 868.42 மீட்டராக உயா்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால், அணையின் நீா்மட்டம் மேலும் உயரும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com