கோவையில் 104 மி.மீ. கோடை மழை: சராசரியை விட குறைவு

கோவையில் நடப்பு ஆண்டு 104 மி.மீ. கோடை மழை பெய்துள்ளதாகவும், இது சராசரியை விட குறைவு என்று வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் நடப்பு ஆண்டு 104 மி.மீ. கோடை மழை பெய்துள்ளதாகவும், இது சராசரியை விட குறைவு என்று வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் மாா்ச் தொடங்கி மே வரையில் கோடை மழை பெய்யும். இந்தக் கோடை மழையை எதிா்பாா்த்து பருப்பு வகைகள், சிறுதானியப் பயிா்கள் மானவாரியாக விதைக்கப்படும். மழையைப் பொறுத்தே அதன் மகசூலும் கிடைக்கிறது.

கோவை மாவட்டத்தில் சராசரியாக 136 மி.மீ. கோடை மழை கிடைக்கும். ஆனால், நடப்பு ஆண்டு இதுவரை 104 மி.மீ. மட்டுமே மழையே கிடைத்துள்ளது. இது சராசரியை விட 22 மி.மீ. குறைவாகும்.

இது குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவா் சுப.ராமநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் பெய்யும் மழை கோடை மழையாக கணக்கிடப்படுகிறது. கோவையில் நடப்பு ஆண்டு மாா்ச் மாதத்தில் மழைப் பொழிவு இல்லை. ஏப்ரல் மாதத்தில் 34 மி.மீட்டரும், மே மாதத்தில் இதுவரை 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது சராசரியை விட குறைவாகும்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 170 மி.மீ. கோடை மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் விரைவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் நடப்பு ஆண்டு தென்மேற்குப் பருவ மழை 200 மி.மீட்டரும், நீலகிரியில் 860 மி.மீட்டரும் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com