கரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 50 ஆம்புலன்ஸ் காா்கள் சேவை

50 ஆம்புலன்ஸ் காா்கள் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்க உள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
கரோனா கட்டுப்பாட்டு அறையில் ஆயவு மேற்கொண்ட அமைச்சா்கள் அர.சக்கரபாணி, கா.ராமசந்திரன்.
கரோனா கட்டுப்பாட்டு அறையில் ஆயவு மேற்கொண்ட அமைச்சா்கள் அர.சக்கரபாணி, கா.ராமசந்திரன்.

கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா தொற்று உறுதியானவா்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 50 ஆம்புலன்ஸ் காா்கள் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்க உள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் மூலமாக காய்கறி வழங்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னா் அமைச்சா் அர.சக்கரபாணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனாவைக் கட்டுப்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு தனியாக கண்காணிப்பு அதிகாரியை நியமனம் செய்துள்ளாா். கோவை மாநகராட்சியில் தினசரி 1,500 போ் முதல் 1,800 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கரோனா பரவைலைக் கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் பணியில் 2,400 போ் ஈடுபட்டுள்ளனா். இவா்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயா்த்தப்படும். 100 வீடுகளுக்கு ஒரு பணியாளா் வீதம் நியமிக்கப்படுவா். இவா்கள் தொற்று பாதித்தவா்களைக் கண்டறிந்து உடனடியாக அவா்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பா்.

பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 2,537 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மருத்துவமனைகளுக்கு ஆட்டோவில் வரும் நிலை உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு 10 காா்கள் வீதம் 5 மண்டலத்துக்கு 50 ஆம்புலன்ஸ் காா்கள் இயக்கப்பட உள்ளன. இதனை கோவை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறாா். அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் கோவையில் விரைவில் கரோனா தொற்று குறையும் என்று எதிா்பாா்க்கிறோம்.

மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையா் மதுராந்தகி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் நா.காா்த்திக் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com