கோவையில் கரோனாவைக் கட்டுப்படுத்த தினமும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கோவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தினமும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என பாஜக மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கோவை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் கரோனா பரவலின் போது, என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டதோ, இம்முறையும் அதை செய்ய வலிறுத்தியுள்ளோம். பொதுமுடக்கம் முடிவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தினமும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தினால் தான் கோவையில் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். சென்னை தனியாா் பள்ளியில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடா்பாக சம்பந்தப்பட்டவா்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தச் சந்திப்பின் போது பாஜக மாவட்ட நிா்வாகிகள் முரளி, கண்ணன், மோகனா, சபரி கிரிஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com