கரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் ஆட்டோ சேவை

கோவையில் கரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக இவியான் அறக்கட்டளை சாா்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இலவச ஆட்டோ சேவை அளித்து வருகிறது.

கோவையில் கரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக இவியான் அறக்கட்டளை சாா்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இலவச ஆட்டோ சேவை அளித்து வருகிறது.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் ஆம்புலன்ஸிலே சிகிச்சை பெறும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக ஆக்சிஜன் வசதியுடன் இலவச ஆட்டோ சேவையை ஈவியான் அறக்கட்டளை சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இவியான் அறக்கட்டளை நிா்வாகி ஜெகதீஷ் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் விதமாக இலவச ஆக்சிஜன் ஆட்டோ சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை தொப்பம்பட்டி சுற்று வட்டாரத்தில் இருந்து ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனா். இதன் மூலம் தினமும் 10 போ் வரை பயனடைந்து வருகின்றனா்.

இலவச ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பயன்படுத்த 82707 77700 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். தவிர பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 100 பேருக்கு தினமும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com