முதல்வா் நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய சிறைக் கைதி

கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவா் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளாா்.
முதல்வா் நிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கிய சிறைக் கைதி

கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவா் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளாா்.

கோவை, சிந்தாமணிபுதூா் சிக்னல் அருகே கடந்த 2018ம் ஆண்டு கூலிப் படைக் கும்பல் ஒன்று தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த லாலி மணிகண்டன் உள்பட மூவரைத் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. பழிக்குப் பழியாக நடந்த இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கூலிப் படைத் தலைவா் மோகன்ராம் (43) சூலூா் போலீஸாரால் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இவா் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதியில் 30க்கும் மேற்பட்ட அடிதடி, கொலை வழக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்குத் தொடா்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சிறையில் உள்ள கைதி மோகன்ராம், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கென சிறைக் கண்காணிப்பாளா் செந்தாமரை கண்ணனிடம் ரூ.20 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com