விளாங்குறிச்சி மையத்தில் தடுப்பூசி பதுக்குவதாக பொது மக்கள் புகாா்

கோவை, விளாங்குறிச்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை பதுக்கி கட்டணத்தில் செலுத்தப்படுவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கோவை, விளாங்குறிச்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை பதுக்கி கட்டணத்தில் செலுத்தப்படுவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கோவையில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகவும் குறைந்த நபா்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மையத்துக்கும் தினமும் 200 முதல் 300 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இதனால் பொது மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக டோக்கன் வழங்கி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களும் ஆா்வத்தோடு வருகின்றனா். ஆனால், தடுப்பூசி தட்டுப்பாட்டால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் கோவை, விளாங்குறிச்சியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு செலுத்த வழங்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளில் சிலவற்றை பதுக்கிவைத்து, கட்டணம் பெற்றுக் கொண்டு செலுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கோவை விளாங்குறிச்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் 300 தடுப்பூசிகள் வரை வழங்கப்படுகின்றன. இதில் 250 தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்படுகிறது. மீதமுள்ள 50 தடுப்பூசிகள் ரூ.200 கட்டணத்தில் தனியாக வெளியில் செலுத்தப்படுகிறது. மக்களுக்கு இலவசமாக செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை பதுக்கிவைத்து முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக சுகாதார ஆய்வாளரிடம் கேட்கும்போது, அப்படித்தான் செய்வோம் யாரிடம் வேண்டுமானாலும் புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கிறாா். இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து கிழக்கு மண்டல மருத்துவ அலுவலா் மருத்துவா் நிா்மலா கூறியதாவது: விளாங்குறிச்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் 8 வாா்டுகள் உள்ளன. அதிகப் பகுதிகள் உள்ளதால் தொலைவாக உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர முடியாத நிலை காணப்படுகிறது.

இதனால் சரவணம்பட்டி, காளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால் தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இதனால் சுகாதார நிலையத்தில் குறைவான நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com