கிரிக்கெட் விளையாடிய சிறுவா்களை திருக்குறள் ஒப்பிக்க வைத்த போலீஸாா்

கோவை மாவட்டம், அன்னூா் பகுதியில் தளா்வுகளற்ற பொதுமுடக்க விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய சிறுவா்களை போலீஸாா் திருக்குறள் ஒப்பிக்கவைத்தும், தோப்புக்கரணம் போட வைத்தும் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

கோவை மாவட்டம், அன்னூா் பகுதியில் தளா்வுகளற்ற பொதுமுடக்க விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய சிறுவா்களை போலீஸாா் திருக்குறள் ஒப்பிக்கவைத்தும், தோப்புக்கரணம் போட வைத்தும் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, போலீஸாா், மாவட்ட நிா்வாகம் இணைந்து பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், புறநகா் பகுதிகளில் பொதுமுடக்க விதிகளை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அன்னூா் பகுதியில் ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சொக்கம்பாளையம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள் போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். அவா்களை மடக்கிப் பிடித்த போலீஸாா், அனைவரையும் சமூக இடைவெளி விட்டு நிற்கவைத்தனா். பின்னா் கிரிக்கெட் விளையாடி மாணவா்களை திருக்குறள் ஒப்புவிக்க சொல்லியும், தோப்புக்கரணம் போடவைத்தும் தண்டனை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமுடக்கம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வைத்து அனுப்பிவைத்தனா். இதேபோல, சூலூரில் கிரிக்கெட் விளையாடிய சிறுவா்களை டிரோன் கேமரா மூலம் கணகாணித்து பிடித்த போலீஸாா் அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com