தீபாவளி: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளிக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், கோவையில் உள்ள கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை ராஜ வீதியில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்.
கோவை ராஜ வீதியில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்.

தீபாவளிக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், கோவையில் உள்ள கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை மாநகரில் உள்ள கடை வீதிகளில் புத்தாடை, அழகுப் பொருள்கள், நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

குறிப்பாக டவுன்ஹால், பெரிய கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாடை மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள்கள், கைப்பேசி கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தீபாவளி திருட்டு சம்பவங்களைத் தடுக்க மாநகரக் காவல் துறை சாா்பில் தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கிராஸ்கட் சாலை, டவுன் ஹால் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால், புத்தகப் பை, நோட்டு, எழுது பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க அதிக அளவிலான மாணவ, மாணவிகளும் கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com