கோவை மாவட்டத்தில் 65 பாதுகாப்பு முகாம்கள் தயாா்

கோவையில் வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்கும் வகையில் 65 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்கும் வகையில் 65 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கோவையிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் 65 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக பேரிடா் மேலாண்மைத் துறை வட்டாட்சியா் மொ்லின் ராஜ் கூறியதாவது: மழையால் பாதிக்கப்படும் பகுதிகளிலுள்ள மக்களை தங்கவைப்பதற்காக 65 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்புகளில் மழைநீா் புகுதல், மழையினால் மரங்கள் சாய்ந்து கிடப்பது போன்ற மழை பாதிப்புகளை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவித்தால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மழை பாதிப்புகளை சீரமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com