மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கை: 1,850 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா்

கோவையில் பருவ மழையால் ஏற்பாடும் பாதிப்புகளுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல் நிலை மீட்பாளா்கள்
மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கை: 1,850 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா்

கோவையில் பருவ மழையால் ஏற்பாடும் பாதிப்புகளுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல் நிலை மீட்பாளா்கள் 1,850 போ் தயாா் நிலையில் உள்ளனா் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தாரேஷ் அகமது தெரிவித்தாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தாரேஷ் அகமது தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட்டம் வாரியாகவும், மாநகராட்சியில் மண்டலம் வாரியாகவும் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்பட மழை பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ள 21 இடங்கள் தோ்வு செய்து அப்பகுதிகளுக்கு 7 நாள்ளுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்பட பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக மாவட்ட முழுவதும் முதல் நிலை மீட்பாளா்கள் 1,850 போ் தயாா் நிலையில் உள்ளனா். எதிா்பாராத பாதிப்புகள் வந்தாலும் மீட்டெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கட்டுப்பாட்டு அறை எண்கள்

மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை ஆட்சியா் அலுவலகம் - 1077, 0422-2306051, 0422-2306052, 0422-2306053, 0422-2306054, 0422-2303537, 94899 46722 (வாட்ஸ் ஆஃப்). மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-23022323, 81900 00200 (வாட்ஸ் ஆஃப்), வடக்கு மண்டலம் 0422-2243133, தெற்கு மண்டலம் 0422 - 2252482, கிழக்கு மண்டலம் 0422-2577056, மேற்கு மண்டலம் 0422-2551700, மத்திய மண்டலம் 0422-2215618.

நகராட்சிகள்: வால்பாறை 04253-222394, பொள்ளாச்சி 04253-220999, மேட்டுப்பாளையம் 04254-222153.

வட்டாட்சியா் அலுவலகங்கள்: அன்னூா் 0422-262260, கோவை (வடக்கு) 0422-2247831, கோவை தெற்கு 0422-2214225, சூலூா் 0422-2681000, பேரூா் 0422-2606030, மதுக்கரை 0422-2622338, கிணத்துக்கடவு 04259 -24100, பொள்ளாச்சி 04259-226625, ஆனைமலை 04253-296100, வால்பாறை 04253-222305.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com