Enable Javscript for better performance
தற்கொலை செய்த பள்ளி மாணவியின் விவரங்கள் அடங்கிய பேனா் வைத்த மூவா் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    தற்கொலை செய்த பள்ளி மாணவியின் விவரங்கள் அடங்கிய பேனா் வைத்த மூவா் மீது வழக்கு

    By DIN  |   Published on : 18th November 2021 09:40 AM  |   அ+அ அ-   |    |  

    ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் விவரங்கள் அடங்கிய பேனா் வைத்த மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

    தனியாா் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவையைச் சோ்ந்த 17 வயது மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினா்.

    இதில் சிலா், பாலியல் தொல்லையால் உயிரிழந்தவரின் புகைப்படங்கள், பெயரை பொதுவெளியில், ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்ற விதிகளை மீறும் வகையில் மாணவியின் புகைப்படங்கள், பெயா் அடங்கிய அஞ்சலி பேனா்கள் வைத்த மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

    ஆா்.எஸ்.புரம் பகுதியில் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பேனா் வைத்த கெளதம் என்பவா் மீது ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதேபோல உக்கடம் பெருமாள் கோயில் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி பகுதிகளில் மாணவியின் இறப்புக்கு பேனா் வைத்த மதுரையைச் சோ்ந்த தமிழ்நாடு ஆா்ய வைசிய சங்கத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

    இது குறித்து கோவை மாநகர போலீஸாா் வெளியிட்ட செய்தி:

    போக்சோ சட்டப் பிரிவு 23 மற்றும் அதன் உட்பிரிவுகளின்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயா், முகவரி, புகைப்படம், குடும்ப விவரங்கள், பள்ளி, சுற்றுப்புறம் அல்லது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விவரங்கள் உள்பட குழந்தையின் அடையாளத்தை எந்த ஊடகத்திலும், பத்திரிகையிலும், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிடக் கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டிக்கத்தக்க குற்றமாகும்.

    எனவே, எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்ட குழந்தையின் விவரங்களை வெளிப்படுத்தவோ, பகிரவோ கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp